👉 தூய யாக்கோபு ஆலயம் (St. James Church) என்பது தமிழ்நாடு மாநிலம், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான கிறிஸ்தவ ஆலயமாகும்.
👉 எங்கள் ஆலயம், சண்முகபுரம் தூய பேதுரு ஆலயத்திலிருந்து பிரிந்து, 1972 ஆம் ஆண்டு டூவிபுரம் சேகரமாக உருவெடுத்து, இன்று பல ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தி தூத்துக்குடியில் பெரிய சபைகளில் ஒன்றாக வளர்ந்து வருகிறது.
👉 இயேசு கிறிஸ்துவின் அன்பு, கருணை மற்றும் இரட்சிப்பு செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிப்பதையும், தேசத்திற்காக ஜெபிக்கவும், விசுவாசிகளின் ஆவிக்குரிய வளர்ச்சிக்காகவும், சமுதாய நலனுக்காகவும் சேவை செய்வதையே எங்கள் ஆலயத்தின் பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது.
👉 அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் – வந்து ஆண்டவரின் கிருபையை அனுபவிக்குங்கள்.